தமிழ் நாடு உழவர் பேரியக்க மாநில மாநாடு குறித்து சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் தனியார் திருமண திருமண மண்டபத்தில் திருவாரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக.. வருகின்ற டிசம்பர் 21-ம் தேதி திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ் நாடு உழவர் பேரியக்கத்தின் மாவட்ட செயலாளர் உலகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில்.. உழவர் பேரியக்கத்தின் தலைவர் ஆலயமணி கலந்து கொண்டு பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
இந்த கூட்டத்தில்.. ஒன்றியம் வாரியாக எத்தனை வாகனங்களில்
எத்தனை பேர் கலந்து கொள்கிறார்கள்… போன்ற கருத்துக்களை கேட்டு அறிந்தார்.
நிகழ்ச்சியின் தீர்மானங்களாக பயிர் காப்பீட்டை அரசே ஏற்று செலுத்த வேண்டும்.. எனவும் உரங்கள் வாங்கும் பொழுது தேவையில்லாத நுண்ணுயிரி வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.. என்றும் நேரடி நெல் கொள்முதல் நிலைய கையூட்டை தடுத்திட வேண்டும், விவசாய மின் இணைப்பு கேட்கும் அனைவருக்கும் உடனடியாக இணைப்பு தர வேண்டும்… என்றும் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்குரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும்… நிவாரணத் தொகை ஏக்கருக்கு எவ்வளவு தொகை என்பதை உடனே தமிழக அரசு அறிவிக்க வேண்டும்… போன்ற தீர்மானங்கள் ஏற்றப்பட்டு நிறைவேற்றப்பட்டது..
இந்த ஆலோசனை கூட்ட ஏற்பாட்டினை தமிழ் நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில செயலாளர் வேணு.பாஸ்கரன் செய்திருந்த நிலையில்..திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர் அய்யப்பன், மாவட்ட தலைவர் முகமது பாரி,உழவர் பேரியக்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பழனி, மாவட்ட துணைச் செயலாளர்
கணேச.சண்முகம், காசிநாதன் உள்ளிட்ட, மாநில பொறுப்பாளர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.