எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி லயன்ஸ் சங்கம் சார்பில் 101 இலவச தலைகவசம் வழங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சி.மாவட்ட ஆளுனர் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மாவட்ட ஆளுனர் சிறப்பு திட்டமான இலவச தலைகவசம் வழங்கும் திட்டத்தில் பத்தாயிரம் இலவச தலைகவசங்கள் வழங்க திட்டமிட்டுருந்த நிலையில்,சீர்காழியில் 101 பயனாளிகளுக்கு இலவச தலைகவசம் வழங்கும் விழாவினை சீர்காழி லயன்ஸ் சங்க தலைவர் சரவணகுமார் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆளுனர் சவரிராஜ் கலந்து கொண்டு இலவச தலை கவசங்களை மத்திய மாநில பொதுதுறை ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கினர்.விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்,காவல் ஆய்வாளர், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.