திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடுவதற்காக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயவேல் தலைமை தாங்கினார். முன்னதாக ஆசிரியர் உமா நாத் அனைவரையும் வரவேற்று பேசினார், உதவி தலைமை ஆசிரியர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகேசனிடம் சுமார் 100 மரக்கன்றுகள் மற்றும் பாதுகாப்பு வளையத்தை திருவாரூர் வனம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் ராஜா, அன்பு மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.