ராஜபாளையத்தில் வட்டாட்சியர் தனது சொந்த செலவில் மூன்று சக்கர வாகனம் வழங்கி அசத்தல்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு இராஜபாளையம் தனி வட்டாட்சியர்(சபாதி) பாலகிருஷ்ணன் அவர்களின் சொந்த செலவில் நான்காவது ஆண்டாக வாங்கப்பட்ட மூன்று சக்கர சைக்கிளை மாவட்ட வழங்கல் அலுவலர் த.அனிதா ராஜபாளையம் வட்டம் முத்துசாமிபுரம் கிராமத்தைச்சேர்ந்த மாற்றுத்திறனாளியான, செல்வி லட்சுமி(19) என்பவருக்கு வழங்கினார் நிகழ்வின் போது இராஜபாளையம் தனி வட்டாட்சியர்(குபொ) மற்றும் சேத்தூர் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.