போச்சம்பள்ளியில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக தென்னை கன்று விவசாயிகள் பெரிதும் பாதிப்படைத்துள்ளனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தென்னையே நம்பி விவசாயம் செய்து வருகின்றனர் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழை யின் காரணமாக புலியூர் அகரம் மஞ்சமேடு பாரூர் அரசம்பட்டி புங்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தென்னை கன்று உற்பத்தி சுமார் 70 ஆண்டு காலத்துக்கு மேலாக உற்பத்தி செய்து வருகின்றனர் இங்கு வளர்க்கக்கூடிய தென்னை கன்றுகளை வெளிநாடு மற்றும் மாநிலங்களில் ஏற்றுமதி செய்யப்படுகிறது
இதன் சிறப்பு அம்சம் அரசம்பட்டி தென்னம் கன்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது தென்னை கன்றுகளுக்கு விதை தேங்காயை நிலத்தில் பதித்துள்ள நிலையில் பெஞ்சில் புயல்லால் பெய்ந்த கனமழையால் சுமார் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதிப்பு தேங்காய் வெள்ளத்தால் அடித்து சென்றுதது அதனால் பகுதி தென்னங்கன்று விவசாயிகள் பெருஅளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்
பலத்த மழையின் காரணமாக இரவு நேரங்களில் கட்டுக்கடங்காத மழை நீர் வந்ததால் வயலில் பதிய வைத்த தென்னம் கன்று அடித்து செல்லப்பட்டதால் இந்தப் பகுதியில் அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது இந்த மழையின் காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தென்னம் கன்று விவசாயிகள் பாதிப்படைத்துள்ளன எனவே உடனடியாக அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்