நீர்நிலைகளை சீரமைக்க வேண்டும், குளங்களை நிரப்பி தூர்வாரும் வகையில் நீர்வழிப்பாதை அமைக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் தீர்மானம்
தஞ்சாவூர் மாவட்டம் பதிவு எண் 27/2024 தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் திருவோணம் ஒன்றியம்
ஊரணிபுரம் அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம்
நேற்று வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில பொருளாளரும் , தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவருமான
வி.எஸ்.வீரப்பன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது .
திருவோணம் ஒன்றிய பொருளாளர் துறை.முருகேசன், நகர செயலாளர் பெரி. சௌந்தரராஜன்,
முன்னாள் காவல்துறை உதவி ஆய்வாளர் நகரத் தலைவர்
ஆர்.முத்துக்குமார்,நகரப் பொருளாளர் ஆர்.முருகேசன்,
ஊரணிபுரம் நகரத் தலைவர்
என்.சந்திரசேகர் ,நகரச் செயலாளர் சோனா.ராமையா,
கரம்பக்குடி ஒன்றிய செயலாளர்
எம்.தங்கசாமி ,ஒன்றிய துணைச் செயலாளர் டி.சித்திரவேல்
கந்தர்வகோட்டை ஒன்றிய, தலைவர் எஸ். கே.வடிவேல்,
திருவோணம் ஒன்றிய நிர்வாகிகள் ஒன்றிய ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஒன்றிய எம்.சதாசிவம், ஒன்றிய ஒருங்கிணைப்பு குழு துணை தலைவர் ஏ. செல்வநாதன் ,ஒன்றிய ஒருங்கிணைப்பு குழு செயலாளர் சி நல்லகண்ணு ,ஊரணிபுரம் நகர கவுரவ தலைவர் ஸேசு.ராசு
தளிகை விடுதி ஊராட்சி செயலாளர்எஸ்.எம்.முருகேசன்,
வெட்டுவா கொட்டை ஊராட்சி செயலாளர் ஆர்.சின்னையன்,
சென்னிய விடுதி ஊராட்சி செயலாளர் பழ. சின்னப்பா,
பி. பல மாணிக்கம் , சி .வீரக்குமார்
ஏ. திருப்பதி ,ஏ .சேகர் கே.மதியழகன்,சி .செல்வராசு
ஏ .அந்தோணிசாமி முருகன்,
ஆகியோர்கள் கலந்து கொண்டு கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
திருவோணம் ஒன்றியம் தளிகை விடுதி ஊராட்சியில் சிவன் கோயில் ரோடு சிவன் கோயில் முதல் அச்சுக்கட்டு வரை சுமார் 2 கிலோ மீட்டர் சாலை மிக மோசமாக உள்ளது இந்த சாலை வழியாக நூறு விவசாய குடும்பங்கள் பயன்பட வேண்டி உள்ளதால்
அதிகாரிகள் இந்த சாலையை ஆய்வு செய்து தார் சாலையாக மாற்ற வேண்டும்.
வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, புயலில் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
மத்திய ,மாநில அரசுகள் ஒன்று சேர்ந்து விவசாயிகள் வாங்கப்பட்ட வங்கிகளில் அனைத்து கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்
சிறு விவசாயிகள், பெரும் விவசாயிகள் என்று பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் தள்ளுபடி செய்ய வேண்டும்
2025 -2026ல் நீர்நிலைகளை சீரமைக்க வேண்டும், குளங்களை நிரப்பி தூர்வாரும் வகையில் நீர்வழிப்பாதை அமைக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.