காஞ்சிபுரம் அப்பல்லோ மருத்துவமனை ஆலோசனை மையத்தில் சிறுநீரக நோய் தொற்று குறித்து மருத்துவர். நித்யஸ்ரீ நந்தகோபால் ஆலோசனை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி ஏகாம்பரநாதர் சன்னதி தெரு பகுதியில் அமைந்துள்ள அப்போலோ மருத்துவமனை சென்னை தகவல் மையத்தில் சிறுநீரக மருத்துவ ஆலோசகர் மருத்துவர்.நித்யஸ்ரீ நந்தகோபால்
டிஎன்பி
(நெப்ராலஜி) சிறுநீரக நோய் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
மேலும் மருத்துவர் நித்யஸ்ரீ நந்தகோபால் தெரிவிக்கையில் சிறுநீரக நோய் ஏற்பட்டால் சிறுநீரகத்தின் செயல்பாடுகள் குறைந்துவிடும் இவற்றால் யூரியாவின் தன்மை அதிகரித்து காணப்படும் மேலும் சிறுநீரக நோய் தொற்று உள்ளவர்களுக்கு சிறுநீர் கழிப்பதில் மாற்றங்கள், சிறுநீர் வெளியேற்றுவதில் அளவு அடர்த்தி, நிறத்தில் மாற்றங்கள் ஏற்படுதல், சிறுநீரக கற்கள் போன்றவைகள் சிறுநீர்பாதை தொற்று சிறுநீரகத்தில் ஏற்பட்டதற்கான அறிகுறியாக இருக்கும்.
மேலும் குறைந்த அளவில் சிறுநீர், சிறுநீரில் ரத்தம், சிறுநீர் நுரைத்து போதல் எல்லாம் சிறுநீரக சேதம் அல்லது சிறுநீரகத்தில் பாதிப்பு இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் ஆகும்.
சர்க்கரை நோய் அதிக அளவிலான ரத்த சர்க்கரை காணப்பட்டால் சிறுநீரக ரத்தக் குழாய்கள் சேதப்படுத்தி சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சிறுநீர் நோய் தொற்று வராமல் இருக்க வயது கூட கூட ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்க உரிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். உடல் பருமன் அதிக அளவு எடை கூடுதல் இருக்காமல் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் அவசியம் என்றும், புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துபவர்கள் கட்டுப்பாடு மிக முக்கியம், உணவில் குறைந்த அளவு உப்பு உட்கொள்ளுதல், தேவையான அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும் தண்ணீர் குடிக்காமல் இருப்பதும் கூடாது அதிகப்படியான தண்ணீர் உட்கொள்வதும் இருக்கக் கூடாது, ஒரு நாளைக்கு ஒன்றிலிருந்து இரண்டு லிட்டர் தண்ணீர் மட்டுமே அருந்தினால் போதும். தலைவலி மற்றும் ஊடல் வலிகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் இல்லாமல் மருந்தக மருந்து கடைகளில் மருந்தை உட்கொள்வதாலும் சிறுநீர் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் என தெரிவித்தார்.
தண்ணீர் நிறைய குடிங்க, ரத்த கொழுப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் கட்டுக்குள் வைக்கவும், உடற்பயிற்சி மேற்கொள்ளவும், உணவு உட்கொள்வதில் கட்டுப்பாடுகளை மேற்கொண்டால் மட்டுமே சிறுநீரக நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம், மேலும் சிறுநீர் அடங்காமை, சிறுநீர்ப்பை பிரச்சனைகள், அதிக அளவு யூரியா & கிரியேட்டினின், நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளுக்கும் சிறுநீரக ஆலோசகர் மருத்துவர் நித்தியஸ்ரீ நந்தகோபால் ஆலோசனை வழங்கினார்.