நீலப் புலிகள் இயக்கம் சார்பில் நடைப்பெற்ற இட ஒதுக்கீடு பாதுகாப்பு மாநாட்டில் தனியார் துறையில் இட ஒதுக்கீடு அமுல் படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
கும்பகோணம் நீல புலிகள் இயக்கம் சார்பில் கும்பகோணத்தில் இட ஒதுக்கீடு பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.
மாநாட்டிற்கு நீலப்புலிகள் இயக்க
மாநில தலைவர் புரட்சி மணி தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக தலித் மக்கள் முன்னணி தலைவர் திருநாவுக்கரசு, பகுஜன் சமாஜ் கட்சி மாநில துணைத் தலைவர் ராஜவேலு, இந்திய குடியரசு கட்சி பொதுச் செயலாளர் மங்கா பிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது மாநில தலைவர் புரட்சி மணி பேசியதாவது:-
அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக எந்த தரவுகளுமின்றி எஸ்.சி. எஸ்.டி சமூகத்தை சிதறடிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட உள் ஒதுக்கீட்டு சிறப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,சச்சார் கமிட்டி மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிட்டியின்படி மத்திய அரசில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு வழங்க வேண்டும் தமிழகத்தில் இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்த வேண்டும், ஆதி திராவிட கிறிஸ்தவர்களுக்கு மக்கள் தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு வழங்கி அவர்களை எஸ்.சி பட்டியலில் இணைக்க வேண்டும்,மக்கள் தொகை அடிப்படையில் பட்டியல் சமூகத்திற்கு 24 சதவித இட ஒதுக்கீட்டை உயர்த்தி கொடுக்க வேண்டும் நிரப்பப்படாமல் உள்ள எஸ்.சி, எஸ்.டி. சமூகங்களின் பின்னடைவு பணியிடங்களை உடனே போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும், மற்ற மாநிலங்களில் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு சட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டும்.தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த
வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.
கூட்டத்தில் மாநில ஒருங்கினைப்பாளர் சம்சுதீன், மாநில அமைப்பு செயலாளர் பாலு, மண்டல செயலாளர் புகழேந்தி, மாவட்ட செயலாளர் ராம்ஜி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.