திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தேசூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உணவு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் என்.அனந்தராஜன் தலைமை தாங்கினார். உணவுத் திருவிழாவை வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆறுமுகம், ஆசிரியர் பயிற்றுநர் பாலாஜி ஆகியோர் தொடக்கி வைத்து பார்வையிட்டனர்.

மேலும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் வரலட்சுமி மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்று உணவு திருவிழாவை பார்வையிட்டனர். விழா ஏற்பாட்டை ஆசிரியை உமா மகேஸ்வரி, தன்னார்வல ஆசிரியர்கள் யாஸ்மின், சத்தியவாணி, மீனா ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். உணவுத் திருவிழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.