தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், டிச- 10. தஞ்சாவூர் மேம்பாலம் அருகே உள்ள பார்வை குன்றியவர்களுனக்கான அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவரகளுக்கு துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திமுக மாநகர ஆதிதிராவிடர் நலக் குழு சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது .
தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞர் அணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தஞ்சை மத்திய மாவட்ட திமுக மற்றும் சார்பு அணிகள் சார்பில் கடந்த நவம்பர் மாதம் 1-ந் தேதி முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லம், முதியோர் இல்லம், பார்வையற்றோர் பள்ளி, மாற்றுத் திறனாளிகளுக்கு தினந்தோறும் மாநகர திமுக மற்றும் சார்பு அணிகள் சார்பில் காலை, மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சை மேம்பாலம் அருகே உள்ள பார்வை குன்றியவர்களுனக்கான அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு திமுக மாநகர ஆதிதிராவிடர் நலக் குழு அமைப்பாளர் மணிகண்டன் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயரும், மாநகர செயலாளருமான சண்.இராமநாதன். மாவட்ட துணை செயலாளர் கனகவள்ளி பாலாஜி, மாநகர துணை செயலாளர் எழில், மாவட்ட பிரதிநிதி உதேக், கரந்தை பகுதி செயலாளர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் மேத்தா, லெனின், விஜயபாபு, சுந்தர செந்தில், முகமது சுல்தான் இப்ராஹிம், மாவட்ட ஆதிதிராவிடர் நலக் குழு அமைப்பாளர் சிந்தனைச் செல்வன் முரளி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் கமலா ரவி, மகளிர் அணி இந்திரா, மாநகர வர்த்தக அணி அமைப்பாளர் எஃப்.சி.ராஜ், மாநகர ஆதிதிராவிடர் நலக் குழு துணை அமைப்பாளர்கள் குணசேகரன், பழக்கடை சுரேஷ், சுரேஷ் காந்தி, பிரதாப், மனோஜ் ஆலமரம் கேசவன், மெடிக்கல் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.