தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் சிவவிடுதி கிளைக் கூட்டம் ஸ்ரீ.சக்தி விநாயகர் ஆலயத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கிளைத் தலைவர்கள். ஆர். வேலுகண்ணு , எம் .கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது . மாவட்ட தலைவர் ஆர். கோவிந்தராஜ், மாவட்டச் செயலாளர் வி.கே.சின்னதுரை, மாவட்ட பொருளாளர் கே பி துரைராஜ், செயற்குழு உறுப்பினர் கே. தங்கராசு (வனத்துறை ஓய்வு ) ஆகியோர் கலந்து கொண்டு சங்கத்தின் எதிர்கால பணிகள் குறித்து பேசினார்கள்

தொடர்ந்து ஒன்றிய பொருளாளர் வீ.முருகேசன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் கே.ஆர். முருகேசன்,கிளைச் செயலாளர் ஆர்.சரவணன் ,செயற்குழு உறுப்பினர்கள் ஆர். ரெங்கராஜ், ஆர். கிருஷ்ணமூர்த்தி,எஸ் ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச் சங்கத்தின் ஒன்பதாம் ஆண்டு விழா மற்றும் உலக விவசாயிகள் தினமான டிசம்பர் 23, தேதி அன்று 500 விவசாயிகள் 250 இருசக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்று 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் கம்பங்களில் சங்கக் கொடி ஏற்றி கொண்டாட ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.

சமீபத்தில் பெய்த கனமழையால், டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த சம்பா பயிர்களும் பல இடங்களில் தண்ணீர் தேங்கி சேதமடைந்துள்ளன. எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ரூ.10 ஆயிரம் மற்றும் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கு ஏக்கருக்கு 30,000/- பேரிடர் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும்.

திருவோணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த சில ஆண்டுகளாக வருவாய்த்துறை, பதிவுத்துறை மற்றும் காவல்துறையின் உதவியுடன் 1000க்கும் மேற்பட்ட ஆவணங்களை முறைகேடாக பதிவு செய்து நில மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கையை எடுக்க தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் எடுக்க வேண்டும் என உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *