திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத்திற்கு அடுத்தபடியாக பெரியகுளம் கைலாசநாதர் மலைக் கோயிலில் மகா கார்த்திகை தீபம் ஏற்றும் திருவிழா…
திருவண்ணாமலை கோயில் பெளர்ணமி கிரிவலத்திற்கும் கார்த்திகை மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சிக்கு அடுத்ததாக தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் நடைபெறும் ” இருபத்தி நான்காவது ஆண்டு ” மகா கார்த்திகை தீபத் திருவிழா கைலாசநாதர் மலைக்கோயிலில் வருகின்ற13/12/24 வெள்ளிக்கிழமை நடைபெரும். அன்று காலையில் இருந்தே சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று அதனை தொடர்ந்து கொடியேற்றம் நடைபெறும் . மாலை 4.30 மணி முதல் 5.00 மணி வரை பிரதோஷ வழிபாடு நந்திகேஷ்வரருக்கு ஒன்பது வகையான அபிஷேகம் செய்து அதன் பிறகு தீபாராதனை நடைபெறும். அதை தொடர்ந்து மாலை6.05 மணிக்கு மேல் மகா தீபம் ஏற்றுதல் நிகழ்வுகள் நடைபெறும்.வருகின்ற பக்தர்களுக்கு காலையில் இருந்து இரவு 10.00 மணிவரை பிரசாதம் -அன்னதானம் வழங்கபடும். மறுநாள்.14/12/24 சனிக்கிழமை மாலை பெளர்ணமி கிரிவலமும், அன்னதானமும் நடைபெறும்.இந்த மலைக்கோயிலில் பெளர்ணமியன்று கிரிவலம் வரும் பக்தர்கள் எண்ணங்கள், அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை இந்த மலையில் சித்தர்கள் ரிஷிகள் முனிவர்கள் சூட்சுமம் ஆக வந்து செல்கின்றனர் என்று சான்றோர்கள் கூறி வருகிறார்கள். இந்த புனிதமான இடத்தில் கைலாசநாதர் தியான நிலையில் இருப்பதால் மன அமைதிக்கு சிறந்த புண்ணிய ஸ்தலமாக விளங்கி வருகிறது.
கைலாசநாதர் மலைக்கோயில் மகா தீப ஜோதியை தரிசித்து எம்பெருமான் கைலாசநாதர் அருள் பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அன்பர் பணி செய்யும்பராமரிப்பு குழுவின் சார்பாக அழைக்கின்றனர்.