பவுஞ்சூர் அடுத்த கடுகப்பட்டு துணை மின்நிலையம் அருகே பெரிய இரும்பு மின்கம்பம் சாலையின் பக்கம் சாய்ந்துள்ளது.தினசரி மதுராந்தகம் முதல் கூவத்தூர் கிழக்கு கடற்கரை சாலை வரை செல்லும் பிரதான சாலை என்பதால் ஏராளமான வாகனங்கள் இந்த சாலையில் பயனிக்கின்றன. மேலும் பள்ளி கல்லூரி மாணவர்கள் அதிகளவு இந்த சாலையை பயன்படுத்துகிறார்கள் எனவே உடனடியாக விபத்து ஏதும் ஏற்படாத வண்ணம் மின்கம்பத்தை சரியாக உயர்த்தி நட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்