வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
மழையால் பாதித்த சின்ன வெங்காயப்பயிர்களுக்கு நிவாரணம் வேண்டி அமைச்சர் கே என்.நேருவிடம் செங்கை செல்லமுத்து கோரிக்கை மனு
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் வரதராஜபுரம் ஊராட்சி செங்காட்டுப்பட்டி மற்றும் கோம்பை ஊராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம் அழுகி விவசாயிகளின் வாழ்வாதரத்தை மிகவும் பாதித்துள்ளது. விவசாய
கிணறுகளின் சுற்றுச்சவர்கள் இடிந்து சேதம் அடைந்ததை மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் செங்கை செல்லமுத்து, கிளை கழக செயலாளர் ராமராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேருவின் பார்வைக்கு கொண்டு சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசின் சார்பில் நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை மனு அளித்தார். இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை நேற்று பார்வையிட வந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் செங்கை செல்லமுத்து விவசாயிகள் சார்பில் மனு அளித்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.