கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நீதிமன்றம், நீதிபதிகள் குடியிருப்பு கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினர்.

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் நீதிமன்றக் கட்டடம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு கட்டடங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.ஜவகர் ஆகியோர் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராஜேந்திரன் முன்னிலையில் அடிக்கல் நாட்டினர்.

பொதுப்பணித்துறை சார்பில் ரூ.13.95 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம் தரைதளம் 1764.50 சதுரமீட்டர் பரப்பும், முதல் தளம் 1368.50 சதுரமீட்டர் பரப்பும் என மொத்தம் 3133 சதுரமீட்டர் பரப்பில் கட்டப்படவுள்ளது. இக்கட்டடத்தில் மூன்று நீதிமன்றங்கள் மற்றும் சிற்றுண்டி சாலை, வாகன நிறுத்தம் ஆகிய வசதிகளுடன் அமையவுள்ளது.

தரைதளத்தில் நீதிமன்ற வளாகம், சார்பு நீதிபதி நீதித்துறை, நடுவர் நீதிமன்ற வளாகம், அரசு வழக்கறிஞர் அறை, சட்ட உதவி அறை. காவலர் லாக்கப் மற்றும் காவலர் காத்திருப்பு அறை, பொது வழக்கறிஞர் (ஆண்). பொது வழக்கறிஞர் (பெண்). ஆலோசனை, மின் சமரசம் மற்றும் நீதிமன்றம் /வீடியோ கான்பரன்ஸ், பொது காத்திருப்பு. நுழைவு, லாபி, வரவேற்பு, முத்திரை விற்பனையாளர், வங்கி, தபால் அலுவலகம், தொலைநகல் மற்றும் இணையம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, மருந்தகம், மின்சார அறை, பொது கழிப்பறை (பெண்கள், ஆண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினம்) மற்றும் பணியாளர்கள் கழிப்பறை (பெண்கள் மற்றும் ஆண்கள்)ஆகிய வசதிகளுடன் கட்டப்படவுள்ளது

முதல் தளத்தில் உரிமையியல் நீதிமன்ற வளாகம், மத்திய நசீர், அரசு வழக்கறிஞர் அறை, உதவி அரசு வழக்கறிஞர் அறை, இரண்டு பதிவு அறைகள், இரண்டு சொத்து அறைகள், சாப்பாட்டு அறைகள், தலைமை அறை, இரண்டு அலுவலகங்கள், வழக்கறிஞர் நூலகம் கழிப்பறை (பெண்கள், எழுத்தர் நீதிமன்ற அறை, பொது ஆண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்) மற்றும் பணியாளர்கள் கழிப்பறை (பெண்கள் மற்றும் ஆண்கள்) லிப்ட் வசதிகளுடன் உள் மற்றும் வெளிப்புறு மின் ஏற்பாடுகளுடன் கட்டப்படவுள்ளது
பொதுப்பணித்துறை சார்பில் ரூ.4.30 கோடி மதிப்பீட்டில் சார்பு நீதிபதி குடியிருப்பு மற்றும் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் குடியிருப்பும் அமையவுள்ளது.


மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் குடியிருப்புக் கட்டடம் தரைதளம் 179 சதுரமீட்டர் பரப்பும், முதல் தளம் 179 சதுரமீட்டர் பரப்பும் என மொத்தம் 358 சதுரமீட்டர் பரப்பில் கட்டப்படவுள்ளது. தரை தளத்தில் நீதிபதி அலுவலகத்துடன் வீட்டு நூலகம், கூடம். 2 இணைக்கப்பட்ட கழிவறை, சமையலறை, அறை. உணவருந்தும் அறை, படுக்கை அறை வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.

சார்பு நீதிபதி குடியிருப்பு கட்டடம் 204 சதுரமீட்டர் பரப்பில் கட்டப்படவுள்ளது. தரை தளத்தில் அமையவுள்ள சார்பு நீதிபதி குடியிருப்பில் நீதிபதி அலுவலகத்துடன் வீட்டு நூலகம், கூடம், 2 இணைக்கபட்ட கழிவறை, சமையலறை, உணவருந்தும் அறை, படுக்கை அறை வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி பி.நாகராஜன், நெய்வேலி சார்பு நீதிபதி திருமதி உமாமகேஸ்வரி, உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரவீன் குமார், செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை (க & ப) திருமதி பிரமிளா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *