கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணத்தில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் தமிழகத்தில் இருக்கும் தொன்மையான அனைத்து கோயில்களையும் திருப்பணி செய்து யுனெஸ்கோ விருது கிடைக்க வேண்டி 10 ஆயிரத்து ஒன்று இல்லங்களுக்கு 11 அகல் விளக்குகள் வழங்கும் நிகழ்ச்சி..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே துக்காட்சி சிவன் கோயிலுக்கு பழமை மாறாமல் கும்பாபிஷேகம் செய்ததற்காக யுனெஸ்கோ விருது கிடைக்கப்பெற்றதது. அதனைத் தொடர்ந்துஅகில பாரத இந்து மகா சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொன்மையான கோயில்களையும் பழமை மாறாமல் புதுப்பித்து யுனெஸ்கோ விருது கிடைக்க வேண்டி கும்பகோணம் மடத்து தெருவில் உள்ள பகவத் விநாயகர் கோவிலில் அகில பாரத இந்து மகாசபா மாநில பொதுச் செயலாளர் இராம.நிரஞ்சன் தலைமையில் 10 ஆயிரத்து ஒன்று இல்லங்களுக்கு 11 அகல் விளக்குகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட பொது செயலாளர் தட்சிணாமூர்த்தி , கும்பகோணம் நகரச் செயலாளர் சூரிய பிரகாஷ் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.