கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணத்தில் மத்திய மாநில அரசுகள் விதித்துள்ள கடுமையான ஜிஎஸ்டி வரி உயர்வுகளை திரும்ப பெறக் கோரி அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்…..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பில் மத்திய மாநில அரசுகள் விதித்துள்ள கடுமையான ஜிஎஸ்டி வரி உயர்வுகளை திரும்ப பெறக் கோரியும், மாநில அரசுகள் விதித்துள்ள தேவையற்ற வரிகளை நீக்கவும், மேலும் வரி கட்டுவதற்கான கால வரம்பை உயர்த்தி தரவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடந்தை அனைத்து வணிகர் சங்கத் தலைவர் மகேந்திரன் தலைமையில் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இந்த ஆர்ப்பாட்டத்தில் குடந்தை அனைத்து வணிகர் சங்க செயலாளர் சத்தியநாராயணன், பொருளாளர் ஜியாவுதீன் , தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மாணிக்கவாசகம், சுப்பிரமணியன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.