கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
பல்லடம் கண்டியன் கோயில் ஊராட்சி பகுதியில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க விழிப்புணர்வு மற்றும் அறிவிப்பு பதகைகள் வைத்த பொதுமக்கள்…..
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அவிநாசி பாளையம் சேமலை கவுண்டம்பாளையம் பகுதியில் கடந்த மாதம் 29ஆம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து 14 தனி படை அமைத்தும் இன்று வரை காவல்துறை இனருக்கு எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை இதனைத் தொடர்ந்து இதே போல் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க செம்மலை கவுண்டம்பாளையத்தை அடுத்த கண்டியன் கோவில் பகுதியில் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் அப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் ஊருக்குள் மற்றும் வீதிகளில் நுழைய தடை செய்வோம் பழைய துணி வாங்குபவர் போர்வை பெட்ஷீட் விற்பவர் பழைய இரும்பு வியாபாரம் செய்பவர்கள் வளையல் விற்பவர்கள் நன்கொடை என்ற பெயரில் ஆண்கள் பெண்கள் வீடு வீடாக வருபவர்கள் என அனைவரையும் தடை செய்ய வேண்டும் இரவு நேரங்களில் புதிய நபர்கள் கதவை தட்டினால் விசாரிக்காமல் யாரும் கதவை திறக்காதீர்கள் என அறிவிப்பு மற்றும் விழிப்புணர்வு பதகைகள் பல இடங்களில் கண்டியன் கோவில் கிராம பொதுமக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.