கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
பல்லடம் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து ஐம்பதாயிரம் ரொக்கம் இரண்டு பவுன் தங்க நகைகள் வெள்ளி பொருட்கள் லேப்டாப் உள்ளிட்டவைகள் திருட்டு…… கொள்ளையர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை…..
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மலையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் இவர் திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார் இந்நிலையில் நேற்று அவர் தனது குடும்பத்தினருடன் சொந்த வேலை காரணமாக திட்டக்குடி வரை சென்றதாக கூறப்படுகிறது தொடர்ந்து பகுதியில் உள்ள முத்துக்குமாரின் நண்பர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார் அப்போது முத்துக்குமாரின் வீட்டின் முன் பக்க கேட் பூட்டப்பட்டிருந்த நிலையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து பல்லடம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார் சம்பவ இடம் விரைந்து சென்ற போலீசார் வீட்டினுள் சென்று பார்வையிட்டனர் அப்போது வீட்டில் வைக்கப்பட்டு இருந்த 50,000 ரூபாய் ரொக்கம் தங்க நகை வெள்ளி பொருட்கள் மற்றும் லேப்டாப் ஆகியவைகள் திருட்டு போனது தெரிய வந்தது இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பல்லடம் போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.