திருவாரூர் மாவட்டம் நன்னிலம் குடவாசல் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழையால் சாகுபடி செய்யப்பட்டு இருந்த சம்பா பயிர்கள் வயலில் சாய்ந்தது.. விவசாயிகள் வேதனை

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல நூறு ஏக்கர் பரப்பளவு சாகுபடி செய்யப்பட்டு இருந்த சம்பா பயிர்கள் முதிர்ச்சி அடைந்து வளர்ந்த நிலையில்
 திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக வயலில் சாய்ந்து உள்ளன  இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் 
 திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி சுமார்  மூன்று லட்சத்து 75 ஆயிரம் ஏக்கருக்கு மேலாக செய்யப்பட்டுள்ளது  கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் வயலில் சூழ்ந்து பின்பு வடிந்து,  பயிர்களும் நன்றாக வளர்ந்து வந்த நிலையில்
பெரும்பாலான இடங்களில் பல நூறு ஏக்கர் சம்பா சாகுபடி பயிர்கள் பால் கட்டும் பருவத்திலும்  கதிர் வந்த பருவத்திலும், தண்டு உருண்டு வரும் நிலையிலும் உள்ளன

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் நன்னிலம் பகுதிகளில் குறிப்பாக வெள்ளை அதன்பார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பால் கட்டும் பருவத்தில் உள்ள பயிர்கள் நெற்கதிர்கள் வந்த பயிர்கள் தண்டு உருண்டு வரும் நிலையில் உள்ள வளர்ச்சி அடைந்த பயிர்கள் நேற்று பெய்த கனமழை காரணமாக வயல்களில் சாய்ந்து உள்ளன
சாய்ந்த பயிர்கள் நிமிர்வது என்பது வாய்ப்பே இல்லாத சூழ்நிலையில் சாய்ந்த பயிர்களில் இருந்து வரக்கூடிய கதிர்கள் எண்ணிக்கை குறைந்து மகசூல் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *