கும்பகோணம் செய்தியாளர்
ஆர் .தீனதயாளன்
கும்பகோணத்தில் தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்றும், மத்திய அரசு ஆண்டுதோறும் வரி உயர்த்தும் நடவடிக்கை கைவிட வேண்டும் என்று
கும்பகோணத்தில் செய்தியாளர் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டியளித்தார்….

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது.,
தேர்தல் வாக்குறுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய
கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்றும்,தமிழக முழுவதும் 1 கோடி பனைவிதைகளை விதைக்கப் போவதாகவும், ஒன்றிய பாஜக அரசு ஆண்டுதோறும் ஜிஎஸ்டி வரி உயர்த்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அவர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
நிகழ்ச்சியில் சிபிஐ மாநிலச் செயற்குழு உறுப்பினர் சிவப்புண்ணியம், மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி , மாநிலச் செயலாளர் திில்லைவனம், மாவட்டத் துணைச் செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் டைமன்ட் பாலா மற்றும் மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் மாவட்டச் செயலாளர்கள் நிர்வாகிகளை என பலர் கலந்து கொண்டனர்.