குடவாசல் அருகே உள்ள விக்கிரபாண்டியம் ஊராட்சியில் தோட்டக்கலைத் துறையின் மூலம் மானிய விலையில் பழ செடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே விக்கிரபாண்டியம் ஊராட்சியில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பழ தொகுப்பு செடிகள் வழங்கும் நிகழ்ச்சி விக்கிரபாண்டியம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உதவி தோட்டக்கலை அலுவலர் சிவமணி, ஊராட்சி செயலாளர் வடுகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மானியத்தில் பழ செடிகளை வழங்கினர். 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பழ செடிகளை பெற்றுக் கொண்டனர். பழ செடி தொகுப்பு ஒன்றில் சப்போட்டா, கொய்யா, பப்பாளி, சீதா, எலுமிச்சை ஆகிய ஐந்து வகையான பழ செடிகளை கொண்டது. இதனை ஆதார் நகல் மற்றும் 75% மானியத்தில் ரூபாய் 50/- தொகை (முழு மதிப்பு- ரூபாய் 200/-) செலுத்தி பெற்று கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.