கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் பண்ணந்தூர் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தவத்திரு சற்குரு பண்ணந்தூர் சித்தர் ஆலயத்தில் இரண்டாம் ஆண்டு வருட அபிஷேகம் இன்று கோவில் தர்மகர்த்தா செந்தில் குமார்,மு.கூட்டுறவு சங்க தலைவர் பண்ணந்தூர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் முன்னால் ஒன்றிய கழக செயலாளர் பிரபாகரன், ஊர் கவுண்டர் அசோகன், ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோ, முன்னால் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஐ.கே.முருகன், ராதாகிருஷ்ணன், முத்து, தென்ரசு, சுப்பிரமணி, வழகறிஞர் சுரேஷ், கிரின் வேலி பள்ளியின் தாளாளர் திரவியம், சங்கர், அகிலன், பம்பை செல்வம்,கோயில் அர்சகர் ஜெயசீலன்,மற்றும் ஊர்பொதுமக்கள் சிவனடியார்கள் திரளாக கலந்து கொண்டனர்.