தேனி மாவட்டம் தமிழகம் கேரளாவை இணைக்கும் முக்கிய சாலையான மூணாறு போடி மெட்டு மலைச் சாலையில் தற்பொழுது பெய்து வரும் கனமழையால் மழைச்சாலையின் 11 ஆவது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டு பாறை உருண்டு ரோட்டில் விழுந்ததால் இருசக்கர வாகனங்கள் பொது போக்குவரத்து பஸ்கள் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு உள்ளது
இது குறித்து தகவல் அறிந்த மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் பாறையை அகற்றி போக்குவரத்தை சீராக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்