பெரும் மழை மாவட்ட நிர்வாகம் வேண்டுகோளை ஏற்று நாளை டிசம்பர் 14ம் தேதி கோவில்வண்ணி டோல்கேட் முற்றுகை போராட்டம் ஒத்திவைத்து எதிர்வரும் டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறும் பிஆர்.பாண்டியன் தகவல்…

திருவாரூர் மாவட்டம் தஞ்சாவூர் – நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை முடிவடையாத நிலையில் சட்டவிரோதமாக நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணி சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் சுங்க சாவடி அமைப்பதை கொள்கை ரீதியாக மத்திய அரசு கைவிட வேண்டும்.60 கிலோமீட்டர் சுற்றளவு வரை உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை 14ஆம் தேதி கோவில்வெண்ணி சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான தயார் பணியில் ஈடுபட்டு வந்தோம்

இந்நிலையில் கடந்த 10ம் தேதி மன்னார்குடி கோட்டாட்சியர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டத்தில் தீர்வு காண முடிவுகளை இறுதிப்படுத்த முடியாத நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது

இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்து பேசி சாலைப் பணிகளை ஆய்வு செய்வதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிரந்தர தீர்வு காணுவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது. தொடர்ந்து பெரும் மழைப்பொழிவு தொடர்வதால் நிரந்தர தீர்வு காணுகிற வகையில் முடிவெடுக்க முடியாத நிலை உள்ளதாகவும், போராட்டத்தை ஒத்திவைக்க கேட்டுக் கொண்டனர்

அதனை அடுத்து போராட்ட குழு அவசர கூட்டம் இன்று நீடாமங்கலத்தில் நடைபெற்றது.மாவட்ட நிர்வாகத்திற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு உரிய கால அவகாசம் அளித்தும்,
பெருமழையை கருத்தில் கொண்டு நாளைய 14ஆம் தேதி போராட்டத்தை ஒத்திவைப்பது. மீண்டும் வரும் 27 ஆம் தேதி போராட்டத்தை நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர்
பி ஆர் பாண்டியன் மாநில கௌரவ தலைவர் நீலன் அசோகன் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கோவில்வெண்ணி ராஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்கள் வாகன உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *