கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
பல்லடத்தில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழை நீர்..
வீடுகளை விட்டு வெளியில் வர முடியாமல் பொதுமக்கள் தவிப்பு……
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அண்ணா நகர் பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் பல்லடம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்து வரும் நிலையில் அண்ணாநகர் பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் வீடுகளை மழை நீரானது சூழ்ந்துள்ளது மேலும் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளே பொதுமக்கள் முடங்கிக் கிடக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது அதேபோல் கழிவு நீருடன் மழை நீர் கலப்பதன் காரணமாக நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது உடனடியாக குடியிருப்பு பகுதியை சுமந்துள்ள மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பல்லடம் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்