தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் கனமழை முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடந்தது தேனி மாவட்டத்தில் டிசம்பர் 13 14 ஆகிய நாட்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்ச் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது மேலும் வரும் டிசம்பர் 16 17 ஆகிய இரு நாட்களும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது
மேலும் வடகிழக்கு பருவமழை காலத்திற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் அனைத்து தாலுகாக்களில் உள்ள கண்மாய் குளங்கள் ஊரணிகளில் நீர் நிரம்பி உள்ளதா எனவும் வெள்ளப்பெருக்கின் போது அவசர கால பணியினை மேற்கொள்ள உள்ளாட்சித் துறையினருக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன முல்லைப் பெரியாறு கொட்டக்குடி ஆறு மூலவைகை ஆறுகளில் கனமழையால் திடீரென கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆற்றின் பக்கம் குளிக்க அனுமதிக்க வேண்டாம் என்று உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சி நகராட்சி ஊராட்சி ஆகியவைகள் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் பொதுமக்கள் புகார்களை 1077 மற்றும் 045 46 26 10 93 மற்றும் 2 5 01 01 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என இந்த கூட்டத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்