ஒன்றிய கவுன்சிலர்கள் சாதாரண கூட்டத்தில் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன் தாஸ் நன்றி தெரிவித்து உரை ஆற்றினார்
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி
ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான கூட்டம் டிசம்பர் 13 ஆம் ஆம்தேதி ஒன்றிய
சேர்மன் சரண்யா மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்றது.இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணகுமார், துணை சேர்மன் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் 22 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு ஒன்றிய குழு ஒப்புதல் பெறப்பட்டது.இதனை தொடர்ந்து சேர்மன் சரண்யா மோகன் தாஸ் பேசும் போது, ஒன்றிய குழு தொடங்கி ஐந்து வருடங்கள் நிறைவு அடைந்தது. திமுக ஒன்றிய குழு அமைத்து கொடுத்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு, மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன், நகர செயலாளர் மெடிக்கல் முரளி, ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை மற்றும் என்னுடன் பணிபுரிந்த அரசு அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.இதில் மேலாளர் செந்தில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணகுமார்,கோகிலா, பொறியாளர்கள், ஒன்றிய மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேந்திரன், அசோகன், சுபாஷ், சிவகுமார், சுப்ரமணியன் , முருகேசன்,சின்னம்மாள் , மகேஸ்வரி,ரூபிணி ,சரசு,புனிதா,பேபி, சரண்யா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்