கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே பாபநாசம் பகுதிகளில் தொடர் மழையால் வெற்றிலை கொடிக்கால் மழைநீர் சூழ்ந்து முற்றிலும் சேதம்….
விவசாயிகள் வேதனை.. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு நிவாரணம் வழங்க கோரிக்கை….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா இளங்கார்குடி, இராஜகிரி, வன்னியடி, உட்பட பல்வேறு பகுதிகளில் பல ஏக்கர் கணக்கு ஏக்கரில் விவசாயிகள் வெற்றிலை கொடிக்கால் பயிர் செய்துள்ளனர். சமீபத்தில் பெய்த தொடர் மழையினால், இளங்கார்குடி பகுதியில் அமைந்துள்ள வெற்றிலை கொடிக்கால் முழுவதும் மழைநீர் சூழ்ந்து சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வெற்றிலை கொடிக்காலை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட வரவில்லை என வெற்றிலை சாகுபடி செய்த விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.
மேலும் தமிழக அரசின் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடத்தினை நேரில் பார்வையிட்டு கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.