திண்டுக்கல் ஜி.டி.என் கலைக் கல்லூரி மத்திய நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையின் சார்பில், “செயற்கை நுண்ணறிவு மற்றும் பசுமைப் புரட்சி: நிலையான எதிர்காலத்திற்கான நூலக மேலாண்மை” என்ற தலைப்பில் ICSSR ஆதரவுடன் இரண்டு நாட்கள் தேசிய கருத்தரங்கம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
மாநாடு தாளாளர் முனைவர் க. ரத்தினம் தொடக்கி வைத்தார். முதல்வர் முனைவர் எஸ். சரவணன் தலைமை உரையாற்றினார். முக்கிய பேச்சாளர்கள் டாக்டர் என். பஞ்சநதம், டாக்டர் எம். துரைசாமி, டாக்டர் எஸ். சீனிவாசராகவன், மற்றும் டாக்டர் ராகேஷ் குமார் பட் ஆகியோர் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள், பசுமையான நூலகங்கள் மற்றும் டிஜிட்டல் மாற்றங்களை பற்றி விறுவிறுப்பாக பேசினர்.
மாநாட்டில் 159 பேர் பங்கேற்றனர், 94 ஆய்வுத் தாள்கள் வழங்கப்பட்டன, 12 சிறந்த ஆய்வாளர்கள் விருதுகள் பெற்றனர். Dr. S. Aravind அனைவருக்கும் நன்றி தெரிவித்து மாநாட்டை நிறைவு செய்தார்.