யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக193 வது வார மரக்கன்றுகள் நடும் விழா ஒத்தக்கடையில் நடைபெற்றது. யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் தலைமையாசிரியர் தென்னவன் தலைமை வகித்தார்.
யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் பிரபு முன்னிலை வகித்தார். ஆலோசகர் ராகேஷ் வரவேற்றார். சிலம்பம் மாஸ்டர் பாண்டி தொகுத்து வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக தமிழாசிரியர் கார்த்திக் கலந்து கொண்டு மரங்களின் பயன்கள், காற்றின் அவசியம், பல்லுயிர் பெருக்கம், சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து சிறப்புரை நிகழ்த்தினார். கடந்த வாரம் மறைந்த மேலூர் கண்மாய் பட்டியை சார்ந்த 104 வயது சுதந்திரப் போராட்ட தியாகி கட்டச்சாமி நினைவாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.
மேலும் 20 மரங்கள் கவாத்து பணி நடைபெற்றது. நிகழ்விற்கு தேவையான புங்கை, பூவரசு, மந்தாரை மரங்கள் மற்றும் வலைகளை பாலமுருகன் வழங்கினார். விழாவில் சமூக ஆர்வலர் செல்வி, ஸ்டெல்லா மேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் கைகளால் மரங்கள் நடப்பட்டது. நிகழ்வில் பெற்றோர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டு மரங்கள் நட்டனர். மாணவி அரிய நட்சத்திரா நன்றி கூறினார்.