கோவை மறைமாவட்டம் கவுண்டம்பாளையம் புனித ஜான்போஸ்கோ ஆலயத்தில் கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவை அப்பங்கை சார்ந்த இளைஞர்கள் இளம்பெண்கள் மிகச் சிறப்பாக சிறப்பித்தனர். நாடகம் நடனம் பாடல் என பல நிகழ்வுகளை மக்களின் முன் நிகழ்த்தினார்கள். இடையில், கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு பங்கிலுள்ள பெரியோர்கள் முதல் சிறியோர்கள் வரை அனைவரும் கிறித்துமஸ் பரிசுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துக் கொண்டார்கள்.
இவ்விழாவில் புனித ஜான்போஸ்கோ ஆலயத்தின் பங்குத்தந்தை ATS கென்னடி அவர்களுடன் ஜான் போஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் பிச்சை ராபர்ட் அவர்களும், சகோதர் ஜான் போஸ்கோ அவர்களும் இவ்விழாவை சிறப்பாக நடத்தினர்.
அருள் சகோதரிகள், மறைக்கல்வி ஆசிரியர்கள், குழந்தைகள், அனைத்து அன்பிய பொறுப்பாளர்கள் எல்லா குழு உறுப்பினர்கள் மற்றும் இறை மக்களும் கலந்து கொண்டு இவ்விழாவை வெகு விமர்சையாக நடத்தி முடித்தனர். மேலும் பல வடிவங்களில் கிறித்துமஸ் விழா நடைப்பேர உள்ளது.