அலங்காநல்லூர்,
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சின்னஊர்சேரி கிராமத்தில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒன்றிய செயலாளர் வக்கீல் கோடீஸ்வரன் தலைமையில் மாநில அம்மா பேரவை செயலாளரும், மாவட்ட செயலாளருமான டேவிட் அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கேக் வெட்டி குழந்தைகளுக்கு வழங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகள் மேற்கு ஒன்றிய செயலாளர் ரகு, வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெய்பாண்டி, மாவட்ட இலக்கிய அணி நீதி, நகர் செயளாலர் ராஜபிரபு, முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பிரசித்தி பெற்ற முனியாண்டி சுவாமி திருக்கோவிலில் சிறப்பு பூஜை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்நிகழ்வில் அவை தலைவர் செல்வம், ஒன்றிய இணை செயலாளர் சண்முகசுந்தரம், நிர்வாகிகள் வேல்முருகன், கல்லணை சந்திரசேகர், மோகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.