தமிழ் மதுரை அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பில் ஈரோடு டாக்டர் ஆர். ஏ. என். எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் தொல்லியல் களப்பயணத்தில் கலந்து கொண்டார்கள்.
கல்லூரியின் தமிழ் மற்றும் வரலாற்றுத் துறை சார்பில் அத்துறைகளைச் சார்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மதுரையைச் சுற்றியுள்ள தொல்லியல் களங்களை பார்வையிட்டனர்.
முன்னதாக கீழடி அருங்காட்சியத்தை பார்வையிட்ட மாணவர்களுக்கு கீழடியின் முக்கியத்துவத்தையும் தமிழ் மற்றும் தமிழர்களின் தொன்மை வரலாறு பற்றியும் தமிழ் மதுரை அறக்கட்டளையின் தலைவர் கவிச்சிங்கம் சித்தார்த் பாண்டியன் விளக்கினார்.
தொடர்ந்து மாணவர்கள் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தையும் சென்று பார்வையிட்டனர். ஆர். ஏ. என். எம் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் அ. கீதா, முனைவர் . வேணுகோபால் , பேராசிரியர் வி. நந்தினி, வரலாற்றுத் துறைப் பேராசிரியர் செ. சாந்தினி ஆகியோர் கலந்து கொண்டு பயண ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சங்கப்பலகை நிறுவனர் கவிச்சிங்கம் சித்தார்த் பாண்டியன் சான்றிதழ்களை வழங்கினார். விடாத மழையையும் பொருட்படுத்தாது இக் கல்விப் பயணத்தில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது.