திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகாமாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலைசிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் திருப்பாம்புரம் கேசபுரீஸ்வரர் ஆலய செயல் அலுவலர் எஸ். ராஜராஜேஸ்வரன் கூடுதல் பொறுப்பாக இந்த ஆலயத்தில் செயல் அலுவலராக கடந்த சில மாதங்களாக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலய செயல் அலுவலராக பணியாற்றி வந்த கிருஷ்ணகுமார், நேற்று வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயத்தின் செயல் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட செயல் அலுவலருக்கு மாரியம்மன் ஆலயத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.