ராஜபாளையம் பல்வேறு ஆக்கப்பூர்வமான சமுக பண்பாட்டு சேவை பணிகளை செய்து வரும் ஸ்ரீமதி சக்கனி அம்மாள் தர்மராஜா நர்சரி பிரைமரி பள்ளியில் வைத்து பாரதி பிறந்த நாள் அன்ன பூஜை-கீதை ஜெயந்தி விழா ஸ்ரீராவ் பகதூர் ஏ.கே.டி. தர்மராஜா கல்வி தர்ம ஸ்தாபன தாளாளர் ஏ.கே.டி. கிருஷ்ணமராஜு தலைமையில் நடைபெற்றது. ஏ. கே. டி. ரமணி தேவி, கீதா அம்மாள் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
கேந்திராவின் ராஜபாளைய கிராம முன்னேற்றத்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம். வெங்கடேசன் வரவேற்றார். மகளிர் குழுவினர் அன்னபூர்ணா பாசுரத்தை பாடினார்கள். பவனேஷ்வரி மற்றும் நந்தினி அன்ன பூரணிக்கு நைவேத்தியம் படைத்தார்கள்.
ஜெகதா ராம் சிங், தேர அம்மாள் தீப ஆரத்தியை எடுத்தனர். நமது நகர மக்கள் ஏ.கே.டி.கல்வி தர்ம ஸ்தாபன மாணவிகள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் ராம்கோ கல்வி நிறுவனங்கள் மாணவ மாணவிகள் ஆசிரிய, ஆசிரியைகள் வழங்கிய சுமார் 3,500 தராத கிலோ அரிசியை விவேகானந்த கேந்திர கிராம முன்ணேற்றத்திட்ட பெறுப்பாளர் பரமகுரு முனைவர் எம். வெங்கடேசனிடம் ஏ.கே.டி..கிருஷ்ணமராஜா ஒப்படைத்தார்.
விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்றத் திட்ட இணைச் செயலாளர் ஆயுட்கால பணியாளர் பரமகுரு வாழ்த்துரை வழங்கினார் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. சுபாசிணியம்மாள் நன்றியுரை வழங்கினர்.