கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணத்தில் கிறிஸ்துவ ஐக்கிய பேரவை சார்பில் கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட்டம்….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மறைமாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய பேரவை சார்பில் கிறிஸ்து பிறந்த திருநாள் விழா கொண்டாட்டம் கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் தலைமையில் ஏ.ஜே.சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் கும்பகோணம் அனைத்து கிறிஸ்தவ சபைகளின் மாணவ மாணவிகள் கிறிஸ்து பிறப்பை நாடக வடிவிலும் நடனமாடியும் ,ஆடல் பாடல் பாடி காண்போர் அனைவரையும் மகிழ்வித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அனைத்து கிறிஸ்து ஒன்றிணைப்பு செயலாளர் பெனடிக் பர்னபாஸ் , கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன், பாஸ்டர் ஞானதாஸ் , ஜேக்கப் ஜெயராஜ் ,கும்பகோணம் மறைமாவட்ட பங்கு தந்தைகள் பிலோமின் தாஸ், கோஸ் மான் ஆரோக்கியராஜ், எட்மன்ட் லூயிஸ் , டேனியல் தேவதாஸ், ஜான் பிலிப், பாபு பிரின்ஸி, ஜேக்கப் மனோகரன், அன்பழகன், அமலன், ஆர்தர் தேவராஜ், தொகுப்பாளர் ஆண்டனி ராஜ், கிறிஸ்துவ ஐக்கிய பேரவை செயலர் கிறிஸ்துராஜ் மரிய சூசை, கும்பகோணம் இணைச் செயலர் அருளானந்தராஜ் மற்றும் அனைத்து கிறிஸ்துவை ஐக்கிய பேரவை நிர்வாகிகள், செயலாளர்கள்,பொதுமக்கள் , மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்