மாண்புமிகு தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவுபடி, தேசிய பெண்கள் ஆணையம் இணைந்து,
மாண்புமிகு தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஒட்டன்சத்திரம் வட்ட சட்டடப்பணிகள் சார்பாக பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாண்புமிகு.முத்து சாரதா தலைவர் / முதன்மை மாவட்ட நீதிபதி அவரது தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் காவல்துறை சார்ந்த பெண்கள், சமூகநலத்துறை சார்ந்த பெண்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் திட்ட ஊழியர்கள், மருத்துவ பணியாளர்கள் மொத்தம் 130 பேர் கலந்து கொண்டனர்.
திரிவேணி, செயலாளர் / சார்பு நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, திண்டுக்கல் அவர்கள் நிகழ்வை தொகுத்து வழங்கினார். தனபால், சார்பு நீதிபதி, ஒட்டன்சத்திரம் அவர்கள் நன்றி கூறினார். கபாலீஸ்வரன், மாவட்ட உரிமையியல் நீதிபதி, ஒட்டன்சத்திரம், ஒட்டன்சத்திரம் வழக்கறிஞர் சங்க செயலாளர்கள்.முருகானந்தம்,முத்துக்குமார் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர். பாக்யலட்சுமி மற்றும் அகிலா ஆகிய வழக்கறிஞர்கள் பெண்களுக்கான சட்டங்கள் பற்றி எடுத்துக் கூறினார்.