கடலூர் மாவட்டம் வேப்பூரில் தமிழக அரசின் புதிய தொழிற்பயிற்சி மையத்தை விருத்தாசலம் எம்எல்ஏ ராதா கிருஷ்ணன் திறநது வைத்தார்
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் பொருட்டு தொழிற்கல்வியை ஊக்குவிக்கும் விதமாக தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவெ கணேசன் தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் 111 கோடி ரூபாய் மதிப்பில் புதியதாக 10 அரசு தொழிற்பயிற்சி மையங்கள் திறக்க உத்திரவிட்டார்
அதன்படி கடலூர் மாவட்டம் வேப்பூரில் நேற்று 11கோடி மதிப்பில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா நடைபெற்றது
விழாவிற்கு கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் தலைமை தாங்கினார் நல்லூர் ஒன்றிய திமுக செயலாளர் பாவாடை கோவிந்தசாமி, தொழிலாளர் நலன் அமைச்சரின் மகனும் கழுதூர் வெங்கடேஸ்வரா கல்லூரி தாளளருமான சிவெக வெங்கடேசன் வேப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி திருஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
சிறப்பு அழைப்பாளராக விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏ ராதாகிருஸ்ணன் கலந்து கொண்டு அரசு புதிய தொழிற்பயிற்சி நிலையத்தை திறந்து வைத்து மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் விருத்தாசலம் கோட்டாட்சியர் சையது மொஹ்மூத் வேப்பூர் வட்டாட்சியர் மணிகண்டன் வருவாய் ஆய்வாளர் ராஜவேல், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பரமசிவம் காங்கிரஸ் கட்சி முன்னால் மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி, நல்லூர் ஒன்றிய சேர்மன் செல்வி ஆடியபாதம், கொ, கொத்தனூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமாரி ரகுநாதன், ஆதியூர் ஊராட்சி தலைவர் ராஜா, வேப்பூர் ஊராட்சி துணை தலைவர் மஞ்சுளா செல்வராஜ் மற்றும் பல்வேறு அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முன்னதாக உளுந்தூர்பேட்டை அரசு ஐடிஐ முதல்வர் சீனிவாசன் வரவேற்றார் முடிவில் வேப்பூர் ஐ டி ஐ முதல்வர் அழகன் நன்றி கூறினார்