மருத்துவ அடையாள அட்டையில் உள்ள குளறுபடிகளை மத்திய அரசு களைய வேண்டும் பென்ஷனர் தின விழாவில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் கோரிக்கை.
செங்குன்றம் செய்தியாளர்
சென்னை பெரம்பூர் நெல்வயல் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சதர்ன் ரயில்வே பென்ஷனர்ஸ் சமாஜ் தலைமை கிளையின் சார்பில் பென்ஷனர் தினவிழா நடைபெற்றது.
இதில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். குறிப்பாக ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மருத்துவ அடையாள அட்டையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால் அந்த குளறுபடிகளை களைய வேண்டும் எனவும் குடும்ப ஓய்வூதியம் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் எனவும். உறுதித்தொகை பிடிப்பை 15 வருடங்களாக இருப்பதை குறைத்து 12 வருடங்களாக மாற்றி உடனடியாக வழங்க வேண்டும் எனவும். ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்கிட ஆவணம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சதர்ன் ரயில்வே பென்ஷனர்ஸ் சமாஜ் தலைவர் பார்த்தசாரதி. செயலாளர் விஜயன்.
சுப்பாராவ் . சோமசுந்தரம் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர் ரவிக்குமார். டாக்டர் கோடீஸ்வரராவ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.