அண்ணல் அம்பேத்கர் அவர்களை அவமதித்த ஒன்றிய பாஜக அரசின் உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை கண்டித்து திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் பூண்டி கே கலைவாணன் எம் எல் ஏ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.. அண்ணல் அம்பேத்கர் அவர்களை அவமதித்த ஒன்றிய பாஜக அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலையின் முன்பு கட்சியின் மாவட்ட கழக செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கே கலைவாணன் தலைமையில் நடைபெற்றது கண்டன ஆர்ப்பாட்டத்தில் அண்ணல் அம்பேத்கரை அவதூறாக விமர்சித்த உள்துறை அமைச்சர் கண்டித்து கட்சியின் நிர்வாகிகள் கண்டன கோஷமிட்டு உரை நிகழ்த்தினார். மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக் கழக நிர்வாகிகள் நகர ஒன்றிய கிளை வட்டக் கழக செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட சார்பு அணி அனைத்து செயலாளர்கள் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்