மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செல்லம்பட்டி ஊராட்சி ஓன்றியம் திடியன் கிராமத்தில் பல ஆண்டுகளாக தென் திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் வரலாற்று சிறப்புமிக்க திடியன் கைலாசநாதர் ஆலயம் 2500 அடி உயரத்தில் மலையின் உச்சியில் அமைந்துள்ளது.
இந்த கோயிலில் குடிநீர் வசதி இல்லாத காரணத்தினால் கிராம பொதுமக்கள் மதுரை தெற்கு மாவட்ட திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் அவர்களிடம் குடிநீர் பம்பு செய்து தருமாறு கோரிக்கை வைத்துள்ள நிலையில் அதனை ஏற்று தனது சொந்த செலவில் கோவையில் இருந்து அதிக திறன் கொண்ட புதிய பம்பு செட் மோட்டார் தனது சொந்த செலவில் அமைத்துக் கொடுத்து கிராம பொதுமக்களிடம் பாராட்டை பெற்றாா்.