அலங்காநல்லூர்
அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய விதமாக பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தன்ராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேரூர் செயலாளர் ரகுபதி, முன்னிலை வகித்தார். பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், துணைத் தலைவர் சுவாமிநாதன், ஒன்றிய குழு தலைவர் பஞ்சு அழகு, துணைத் தலைவர் சங்கீதா மணிமாறன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் ராஜேந்திரன், அருண்குமார், ஒன்றிய பொருளாளர் சுந்தர், வலையபட்டி ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி இதயச்சந்திரன், பண்னைகுடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனுஷ்கோடி, தண்டலை ஒன்றிய கவுன்சிலர் சரவணன், தொண்டரணி துணை அமைப்பாளர் வாவிடமருதூர் கார்த்திகேயன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள்
சந்தனகருப்பு, மருது, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்த், சோழவந்தான் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தவசதீஷ், மாணவரணி அமைப்பாளர் யோகேஷ், நகர தகவல் தொழில்நுட்ப அணி ஜெயராமன், வெங்கட், மற்றும் சின்னஊர்சேரி கிளைச் செயலாளர் தியாகு, முடுவார்பட்டி சேகர், அலங்காநல்லூர் குமரேசன், மாரிச்சாமி கணேசன், சந்திரன், பொறியாளர் அணி ராகுல், பாலகிருஷ்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்