ராஜபாளையம் வட்ட சட்ட பணிகள் குழுவினரின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!
விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய குழு தலைவர் அவர்களின் ஆணைப்படி இராஜபாளையம் வட்ட சட்ட பணிகள் குழு, தமிழ் கலைஞன் கூட்டமைப்பு மற்றும் முகவூர்
புயல் கலைக்குழு இணைந்து, முகவூர், அம்பேத்கர் சிலை அருகில், பொது மக்களுக்காக சட்ட விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.

முகவூர் ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி, தளவாய்புரம் காவல் ஆய்வாளர் காசிநாதன், வார்டு உறுப்பினர்கள், ராமேஸ்வரன், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலக புற தொடர்பு பணியாளர் சாந்தி, தளவாய்புரம் சார்பு ஆய்வாளர்கள்
ராஜ்குமார் வெள்ளைச்சாமி ஆகியோர்
கலந்துகொண்டு குற்றம் செய்பவர்களை காவல் துறை எப்படி கையால்கிறது
சட்டம் ஒழுங்கு சாலை பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்து , சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்..

இதில் குழந்தை திருமணம் சட்டம்,
போக்சோ சட்டம் குழந்தை தொழிலாளர் தடைச் சட்டம், சட்டப் பணிகள் குழுவில் இலவச சட்ட உதவி பெறுவது, இலவச வழக்கறிஞர் அமைத்துக் கொள்ள தகுதியானவர், சமரச மையம், மக்கள் நீதிமன்றம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது போன்ற தலைப்புகளில் நாடகம் நடத்தினார்கள். மக்களும் ஆர்வமாக கலந்து கொண்டு விழிப்புணர்வு நாடகம் எளிதாக புரியும்படி இருந்ததாக கூறினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *