திருத்தங்கல் நாடார் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை இணைந்து “போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு” நிகழ்ச்சியை நடத்தினர்.

நிகழ்வின் தொடக்கமாக மூன்றாமாண்டு குற்றவியல் துறை மாணவர் அ.பாலசேகர்(NCC Senior under officer) வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் ரோட்டரி கிளப் ஆஃப் கிண்டி, CEO – சுப்ஷா சோலார் பவர் பிரைவேட் லிமிடெட் Rtn P.C. ஷாஜி மற்றும் தர்ஷன் அறக்கட்டளையின் நிறுவனர், சுற்றுச்சூழல் ஆர்வலர் திரு எம். மகாலிங்கம் ஆகியோர் மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி உரையாற்றினர். இந் நிகழ்ச்சியில் 150 மாணவர்கள் கலந்து சிறப்பு செய்தனர்.

இந்நிகழ்வை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் ஜோ.சம்பத்குமார், தேசிய மாணவர் படை அலுவலர் திரு. சு.நரேந்திரகுமார், திரு S.செல்வம் ஆகியோர்கள் சிறப்புற ஒருங்கிணைத்தனர். நிகழ்வின் நிறைவாக சுல்தானா பேகம்(Senior Wing Cadet) நன்றியுரை வழங்கினார். நிகழ்வை சிறப்புற தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி இளங்கலை தமிழ் மூன்றாமாண்டு வீ.முத்துலட்சுமி ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *