திண்டுக்கல், ரெட்டியப்பட்டி பகுதியை சேர்ந்த ஓய்வு மருத்துவ பேராசிரியர் மீனாள்(78)
இவர் ரஞ்சித்குமார் என்பவர் உதவியுடன் 2021ம் ஆண்டு சாணார்ப்பட்டி, வடகாட்டுப்பட்டியை சேர்ந்த ஆரோக்கியத்திற்கு சொந்தமான 11 ஏக்கர் நிலத்தை ரூ.1.14 கோடிக்கு மீனாள் வாங்கினார்.
நிலத்தை பத்திரப் பதிவு செய்தபோது மீனாளின் பெயருக்கு ஒரு பகுதியையும், ரஞ்சித்குமார் மகன்கள் கிருஷ்ணகுமார், சரவணக்குமார் பெயர்களுக்கு மற்றொரு பகுதியையும் பதிவு செய்தார். பத்திரம் கிடைத்தபின் தனது பெயரில் உள்ள சொத்தில் கிருஷ்ணகுமார், சரவணக்குமாரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது மீனாளுக்கு தெரிய வந்தது.
ரஞ்சித்குமாரிடம் கேட்டபோது ஓரிரு நாளில் மாற்றி எழுதிக் கொடுப்பதாக தெரிவித்து திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூரை சேர்ந்த நபர்களுக்கு விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் நவம்பரில் பாரதிராஜ், ராஜ்குமார், கிருஷ்ணகுமார், சரவணக்குமார், ரஞ்சித்குமார், பாரதிராஜின் மனைவி வனஜெயா, ராஜ்குமாரின் மனைவி சுகந்தமணி , சாணார்பட்டி எஸ்.ஐ., அழகர்சாமி ஆகியோர் மீனாளை தாக்கி உள்ளனர்.இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை இல்லாததால் நீதின்றத்தை நாடினார். நீதிமன்ற உத்தரவின் படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.