கம்பம் நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து நகராட்சி மண்டல பொறியாளர் ஆய்வு தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் தற்போது நடைபெற்று வரும் பல்வேறு கட்டுமான பணிகளை நகராட்சிகளின் மண்டல செயற்பொறியாளர் கருப்பையா ராஜா ஆய்வு மேற்கொண்டார் கம்ப நகராட்சியில் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் வாரச்சந்தை வளாகத்தில் நடைபெற்று வரும் ஆம்னி பேருந்து நிலைய கட்டுமான பணிகள் உழவர் சந்தை அருகே நடைபெற்று வரும் வணிக வளாக கட்டிட பணிகள் ஆங்கர் பாளையம் ரோட்டில் உள்ள உரச் செயலாக்க மையம் கட்டும் பணிகள் போன்ற நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை நகராட்சிகளின் மண்டல செயற் பொறியாளர் கருப்பையா ராஜா ஆய்வு செய்து பணிகளை தரமாகவும் துரிதமாகவும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டார் இந்த ஆய்வின் போது நகராட்சி நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் ஆணையாளர் எஸ் பார்கவி பொறியாளர் அய்யனார் உதவி பொறியாளர் சந்தோஷ் குமார் அரசு ஒப்பந்ததாரர்கள் அப்துல் சமது சகாபுதீன் உள் பட பலர் உடன் இருந்தனர்