கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணத்தில் டாக்டர். அம்பேத்கரை அவமதித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து விசிக முற்போக்கு மாணவர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்…..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நாடாளுமன்றத்தில் டாக்டர். அம்பேத்கரை இழிவாகப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து காந்தி பூங்கா முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் விசிகே முற்போக்கு மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர் நவீன் தலைமையில் நடைபெற்றது.
இதில் விசிக முற்போக்கு மாணவர் கழக நிர்வாகிகள் செந்தமிழ் வளவன், நிசாந்த் வளவன், விஜயராகவன்,குணேஷ் இறைவன் ,தர்மா சபரிவாசன் மற்றும் இந்திய மாணவர் சங்கம், இளைஞன் நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு கையில் அம்பேத்கர் திருவுருவ படத்துடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.