திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி கடைவீதியில் அண்ணல் அம்பேத்காரை தரை குறைவாக பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என சிபிஐ, சி பி எம் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் எஸ். எம். செந்தில் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலங்கைமான் ஒன்றிய செயலாளர் டி. சண்முகம், வலங்கைமான் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ.அன்பரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். ராதா, வலங்கைமான் நகர திமுக செயலாளர் பா. சிவனேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். சிபிஎம் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் கே. சுப்பிரமணியன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வலங்கைமான் ஒன்றிய துணை செயலாளர் கே. செல்வராஜ், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பி. சின்ன ராசா,ஒன்றிய தலைவர் எம். கலியபெருமாள், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ஜி.
ரவி, ஒன்றிய தலைவர் ஜி. பிரபாகரன், இளைஞர் பெருமன்றத்தின் ஒன்றிய செயலாளர் வி. பாக்கியராஜ், ஒன்றிய தலைவர் கே. சுதாகர், விவசாய சங்கத்தின் பொருளாளர் ஏ. மருதையன், சிபிஎம் விவசாய சங்க ஒன்றிய தலைவர் இளங்கோவன், தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் பாலையா, முன்னாள் சிபிஎம் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.ஜே. நடராஜன் ஆகியோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் அமித்ஷா தேசத்தந்தை காந்தி, முன்னாள் பிரதமர் நேரு, இந்திராகாந்தி, தஞ்சை பெரியார் உள்ளிட்ட தலைவர்களை தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் அமித் ஷா தற்போது பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் டாக்டர் அம்பேத்கர் மீது அவதூறு பரப்பி பேசினார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அமைச்சரவையில் இருந்து பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி கோசம் எழுப்பினர். நிகழ்வில் பெண்கள் உள்பட கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
