தேனி –
முல்லை-பெரியாறு அணையிலிருந்து 18-ஆம் கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு…

மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா, பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் முன்னிலையில் திறந்து வைத்தார்.

தேனி மாவட்டம், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) சார்பில், முல்லை-பெரியாறு அணையிலிருந்து 18-ஆம் கால்வாயில் ஒரு போக பாசன நிலங்களுக்கான தண்ணீரை மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா, தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் முன்னிலையில் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, 21.12.2024 முதல் பெரியாறு அணையிலிருந்து ஒருபோக பாசன நிலங்களுக்கு விநாடிக்கு 98 கனஅடி வீதம் 30 நாட்களுக்கு 255 மில்லியன் கனஅடி தண்ணீர், நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை பொறுத்து திறந்து விடப்பட்டது.

பெரியாறு அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, பண்ணைபுரம், கோம்பை, தேவாரம், தே.சிந்தலைச்சேரி, சங்கராபுரம், வெம்பக்கோட்டை, பொட்டிபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களைச் சுற்றியுள்ள 2045.35 ஏக்கர் நிலங்களும், போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட மீனாட்சிபுரம், டொம்புச்சேரி, கோடாங்கிபட்டி ஆகிய கிராமங்களைச் சுற்றியுள்ள 2568.90 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 13 கிராமங்களைச் சுற்றியுள்ள 4614.25 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்,
தேனி மாவட்டத்தை சார்ந்த விவசாயப் பொது மக்கள் இந்நீரை சிக்கனமாக , நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற்று பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில், உதவி செயற்பொறியாளர்கள் சாலமன் கிருஸ்துதாஸ் (மஞ்சளாறு வடிநில உபகோட்டம்), எஸ்.மயில்வாகனன் (பெரியாறு வைகை வடிநில உபகோட்டம்), கூடலூர் நகராட்சி ஆணையாளர் கோபிநாத், வட்டாட்சியர் சுந்தர்லால், உதவிப்பொறியாளர் அரவிந்த் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *